இயற்கை

This is the Tamil winning article from the creative writing competition, InkIt, written by Rtr. Arshana Arjunan. Enjoy!

இயற்கை என்பது அண்டத்தின் இயற்பியல் என்று பொருள்படும். அதாவது இயல்பாகவே உருவானது, நம்மை சுற்றி உள்ள அனைத்துமே இயற்கை அன்னையின் படைப்பாகும். இயற்கை என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் நேச்சர் என்று அழைக்கப்படும். இச்சொல்லானது நேச்சுரா எனும் இலத்தின் மொழி சொல்லை தழுவியதாகும். தாவரங்கள், விலங்குகள், வாயு மண்டலம், நீர் மண்டலம், தரை மண்டலம், காலநிலை என நாம் காணும் அனைத்துமே இயற்கை என்ற சொல்லில் அடங்கும். இயற்கை நம் வாழ்வின் ஆதாரமாகி போனது என்பதனை’ விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கேபசும்புல் தலைகாண்ப தரிது’ என்றார் திருவள்ளுவர். கடல் தாயின் மடியில் கண் விழிக்கும் காலை கதிரவன், மனதை மயக்கும் தண்மையான சந்திரன், அகன்று விரிந்த ஆகாயம், மழை துளியாய் மண்ணில் விழுந்து கடலாய் மாறிய நீர், காதோடு கவி பாடும் பறவைகளின் இசையுடன் கூடிய உன்னத காலை பொழுது, அழகிய வானவில் காட்டும் வண்ண ஜாலங்கள், இதமான வேகத்தில் இளம் தென்றல் அது மட்டுமா கண்ணுக்கு குளிர்ச்சியான பச்சை வண்ண காடுகள் என்று எங்கும் இயற்கை எதிலும் இயற்கை மனிதனின் தலையீடின்றி இறைவனின் படைப்பால் உருவான இயற்கையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

மனிதனும் இயற்க்கையின் ஒரு பகுதியே ஆவான். பூமி தோன்றியதில் இருந்து தற்போது வரை தாய்க்கும் சேய்க்கும் உள்ள தொடர்பினை போன்றது இயற்க்கைக்கும் எமக்கும் உள்ள தொடர்பு உலகமானது இயற்கையான நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு என்னும் பஞ்சபூதங்களால் உருவானது, இத்தகைய இயற்கை அளிக்கும் நன்மைகள் எண்ணிலடங்காதவை ஆனால் இயற்கையை சிறிது சிறிதாக சிதைக்கப்பட்டு வரும் இந்த நவீன யுகத்தில் கூட, இயற்கை தன்னை நாளுக்கு நாள் மெருகேற்றி புதிய ஒரு பரிணாமத்தை உயிரங்கிகளுக்கு கொடுக்கிறது. தற்போதைய கால கட்டத்தில் இயற்கையை ஆய்வு செய்வது என்பது அறிவியலின் மிகப்பெரும் பகுதியாக உள்ளது, அறிவியலின் ஆய்வுகளின் படி சுமார் நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு நீலக்கோள் எனப்படும் இப்பூவுலகம் உருவானது. புவி தோன்றிய ஆரம்ப கால கட்டத்தில் எந்த ஒரு உயிர்களும் புவியில் வாழ தகுதியற்றதாகவே காணப்பட்டது, மிகவும் வெப்பமான புவி குளிர்ந்து பல மாற்றங்களுக்கு உட்பட்டு நாம் வாழும் பூமி உருவாகியது. அறிவியல் கொள்கையின் படி புவி தன்னை தானே மாற்றி அமைத்து நமக்கு பரிசாக கொடுத்தது. இப்பேர்ப்பட்ட இயற்கையை காப்பது நமது தலையாய கடமை ஒன்றாகும். மனிதன் தன்னுடைய சுயநலத்திக்காக இயற்கையை கொள்ளை அடித்த போதிலும் இயற்கை பேரழிவுகள் எப்போதும் நடப்பதில்லை. எவ்வளவு உக்கிரமான ஆபத்துகளை தந்தாலும் இந்த வாழ தகுதியுடைய கோளத்தை எமக்கு வழங்கியுள்ளது. 

தற்போதைய தரவுகளின் படி ஒரு செக்கனுக்கு மூன்று பேர் என்னும் வீதத்தில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டு வருகின்றது. உருவாகி வருகின்ற மனித சன தொகை பெருக்கத்தால் காடுகள், விளை நிலங்கள் மற்றும் மந்தை மேய்நிலங்கள் என்பனவற்றை அழிக்கின்றோம். தொழில்சாலை, விவசாய அத்துடன் வைத்தியசாலை கழிவுகளினால் நீரை மாசு படுத்துகிறோம். இப்படி வளி, நீர், காற்று, நிலம் என்பவற்றிக்கு பாதகங்களை விளைவித்ததுடன் வளரும் பிள்ளைகள் நோய் நொடியோடு வளர்வதற்கு நாமே காரணமாகிறோம். இயற்கை நமக்கு தந்த வரங்களில் ஒன்று காடுகள். மண்ணில் காணப்படும் பசும் பொன்னே மரங்கள். சுயநல மனிதன் தனது ஆடம்பரத்திற்காக செழிப்புக்கு முக்கியமான காடுகளை அழித்து வன விலங்குகளையும் தாவரங்களையும் அழிப்பதுடன் உலகிற்கு மிக ஆபத்தான பச்சை வீட்டு விளைவுக்கு வித்திடுகிறான். மரங்களை அழிப்பதால் மனித குலமே அழிவது உறுதியாகும். துரதிஷ்டவசமாக மனிதன் தன்னுடைய வளர்ச்சியின் போக்கில் இயற்கையை பேண தவறவிடுகின்றான். இதன் விளைவாக புவி வெப்பமடைதல் ஒரு பேச்சு பொருளாக மாறி விட்டது. இயற்கையின் படைப்பில் எத்தனை இடர்பாடுகள் வந்தலும் இயற்கை தன்னை இயற்கை புதுப்பிக்க தவறுவதில்லை.

இயற்கையை பாதுகாக்க ஒவ்வொரு தனி மனிதனினதும் கரங்களில் உண்டு. மனிதனாகிய நம் வர்க்கம் பணம் எனும் உயிரற்ற வஸ்துவிற்கு மோகம் கொண்டு எதிர்கால சந்ததியினை அனாதையாக்க முயன்று விட்டோம். இயற்கையின் உரிமையை அழித்து நாம் பணமாக்கி கொண்டோம். இவ்வாறே இந்நிலை தொடர்ந்தால் இயற்கையுடன் பின்னிப்பிணைந்த மனிதன் சில நூற்றாண்டுகளிலே இயற்கையை காண்பதற்கு சுற்றுலா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். இந்த அபாயத்தை தடுக்க ஒவ்வொருவரும் நீரை விரயம் செய்யாது, பொலித்தீன் பிளாஸ்டிக் பாவனைகளை குறைத்து, இயன்றளவு மரங்களை நட்டு இனியதொரு உலகினை கட்டி எழுப்ப வேண்டும். எல்லாவற்றிக்கும் உடனடி தீர்வாக இயற்கையை தேவைக்கு பயன்படுத்த வேண்டும். சுலபம் என்று எண்ணி சுகத்தை பெரிதுபடுத்தாமல் நாகரிகம் என்று எண்ணி நஞ்சை விதைக்காமல் இயற்கை வளங்களை சிதைக்காமல் வாழும் காலம் வரை அதனை போற்றினால் வாழும் உலகம் சுவர்க்கம் தான். இனியாவது எமது அறிவு கண் திறந்து சிந்தை தெளிய வேண்டும்.

ஆதிகாலம் முதலே மனிதனின் வாழ்வானது இயற்கையை சார்ந்தே உள்ளது. இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த மனிதன் இப்பொது அதனை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கின்றான். இயற்கையை அழித்து வரும் நாம் அதில் ஒரு சிறு சதவீதமாவது அதன் வளர்ச்சிக்கு உதவினால் கணக்கவர் இயற்கை அழகினை காண முடியும். பொய்யாகவும் துன்பமாகவும் இருக்கும் செயற்கையை புறம் தள்ளி விட்டு மெய்யாகவும் இன்பமாகவும் இயற்கையை காப்பது நம் மனித குலத்தின் தலையாய கடமையாகும். இவ்வியற்கை சீர்கேடுகளை தடுக்க மனிதர்களின் ஒத்துழைப்பை தீவிர படுத்தவேண்டும். இயற்கை அழிவுகள், அதனால் வரும் விளைவுகள், அதற்கான தீர்வுகள் என்பவற்றை பற்றி விழுப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். இதற்காக உலக நாடுகள் ஒன்றிணைந்து ஒரு குறிக்கோளுடன் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். இல்லையேல் எல்லாம் அழிந்து மனிதன் ஒரு வெறும் பொருளாக மட்டும் இருக்க எனவே உண்மையை உணர்ந்து உலகின் மடியில் தூய்மையான காற்றை சுவாசிப்பதும் யாசிப்பதும் மனிதர்களின் கைகளில் நம் வருங்கால சந்ததிக்கு நல்லதொரு உலகினை ஏற்படுத்தி கொடுப்பதற்க்கு எமக்கு பங்கு உண்டு என்பதனை உணர்ந்து விரைந்து செற்படுவோம் இயற்கையின் காதலர்களாக …… விவேகத்துடன் செயல்படுவோம் ! சுபிட்சமான வாழ்வை படைப்போம்!

“Nature” means the physics of the universe. It means naturally formed; everything around us is the creation of Mother Nature. This word is derived from the Latin word Natura. The word “nature” includes all that we see, like plants, animals, gas systems, water systems, land systems, and climate. Thiruvalluvar said that nature has become the source of our life. The morning ray waking up in the lap of the sea mother, the enchanting moon, the wide expanse of sky, the rain falling on the ground and turning into the ocean, the sublime morning with the music of the birds singing in the ear, the colorful streams showing the beautiful rainbow, the young breeze at a gentle speed, it is only a cool green for the eyes. There are no words to describe the nature created by God’s creation without the intervention of humans.

Nature and Animals

Humans are also a part of nature. The relationship between nature and us is like the relationship between mother and child from the beginning of the earth till now. But even in this modern age where nature is being destroyed little by little, nature is refining itself day by day and giving a new evolution to organisms. Studying nature is an excessively big part of science at present. According to scientific research, this planet, known as the blue planet, was formed about four billion years ago. In the early stages of the earth’s appearance, no life was found fit to live on the earth. The extremely hot earth cooled down and underwent many changes to form the earth we live on. According to the principles of science, the Earth has transformed itself and given it to us as a gift. Protecting this nature is one of our main duties. Although man plunders nature for his own selfishness, natural disasters do not always happen. It has given us this habitable sphere, despite the intense dangers it poses, and according to current data, the population is increasing at the rate of three people per second.

Due to the increasing human population, we are destroying forests, agricultural lands, and herding pastures. We pollute the water with industrial, agricultural, and hospital waste. This type of pollution has harmed the water, air, and land, and we are causing diseases to be passed down to future generations. Forests are one of the gifts that nature has given us. Green and golden trees are found in the field. Selfish man destroys forests vital to prosperity for his luxury, destroys wild animals and plants, and sows the greenhouse effect, which is the most dangerous to the world. By destroying the trees, humankind is sure to perish. Unfortunately, man fails to maintain nature in the course of his development. As a result, global warming has become a talking point. No matter how many obstacles there are in nature’s creation, nature never fails to renew itself.

It is in the hands of every individual to protect nature. We human beings have tried to orphan the future generation by our infatuation with the inanimate object called money. We have made money by destroying the rights of nature. If this situation continues like this, in a few centuries, man, who is intertwined with nature, will have to go on a trip to see nature. To prevent this danger, everyone should not waste water, reduce the use of polythene plastic, plant as many trees as possible, and build a better world. Nature should be used as an immediate solution to everything. If you think it is easy and do not exaggerate comfort and think it is civilization, do not sow greed and don’t destroy natural resources, if you appreciate it until the time you live, the world you live in is heaven. At least we should open our eyes and clear our minds.

Effect of the human activities

Human life has been dependent on nature since the beginning of time. Man, who once lived in harmony with nature, is now moving far away from it. If we are destroying nature and helping its development by even a small percentage, then we can see the beauty of nature. It is the main duty of our humanity to keep aside the artificial, which is false and causes suffering, and protect nature, which is true and pleasant. Human cooperation should be intensified to prevent these natural disasters. Natural disasters, their consequences, and their solutions should be made more widely known. For this, the countries of the world should unite and work together with one goal. Otherwise, everything would perish and man would have to remain a mere object. So, realizing the truth and praying and breathing clean air in the lap of the world, we have a role to create a better world for our future generations in the hands of humans. Let us move fast as lovers of nature.

Let us act wisely! Let us create a better life!

“සොබාදහම” යන්නෙන් අදහස් කරන්නේ විශ්වයේ භෞතික විද්‍යාවයි. එහි අර්ථය ස්වභාවිකව පිහිටුවා ඇති; අප අවට ඇති සෑම දෙයක්ම ස්වභාවධර්මයේ මවගේ නිර්මාණයක් යන්නයි. මෙම වචනය ව්‍යුත්පන්න වී ඇත්තේ Natura යන ලතින් වචනයෙනි. “සොබාදහම” යන වචනයට ශාක, සතුන්, ගෑස් පද්ධති, ජල පද්ධති, භූමි පද්ධති සහ දේශගුණය වැනි අප දකින සියල්ල ඇතුළත් වේ. තිරුවල්ලුවර් පැවසුවේ ස්වභාවධර්මය අපගේ ජීවිතයේ උල්පත වී ඇති බවයි. මුහුදු මාතාවගේ ඇකයේ පිබිදෙන උදෑසන හිරු රශ්මිය, මනරම් සඳ, පුළුල් අහස, පොළව මතට ඇද හැලෙන වර්ෂාව, මහ සයුර බවට පෙරළෙන, කණෙහි ගී ගැයෙන කුරුළු නාදයෙන් යුත් උදාර උදෑසන, මනරම් දේදුන්න පෙන්වන වර්ණවත් දිය පහරවල්, මද වේගයකින් හමා එන තරුණ සුළඟ, එය නෙතට සිසිලසක් පමණි. මිනිසුන්ගේ මැදිහත්වීමකින් තොරව දෙවියන්ගේ මැවිල්ලෙන් නිර්මාණය වූ ස්වභාවධර්මය පිළිබඳ විස්තර කිරීමට වචන නොමැත.

මිනිසුන් ද ස්වභාවධර්මයේ කොටසකි. සොබා දහම සහ අප අතර ඇති සම්බන්ධය මිහිතලයේ ආරම්භයේ සිට මේ දක්වා මව සහ දරුවා අතර ඇති සම්බන්ධය හා සමානයි. නමුත් සොබා දහම ක්‍රමයෙන් විනාශ වන මෙම නූතන යුගයේ ද ස්වභාවධර්මය දිනෙන් දින පිරිපහදු වෙමින් ජීවීන්ට නව පරිණාමයක් ලබාදෙමින් සිටී. ස්වභාවධර්මය අධ්‍යයනය කිරීම වර්තමානයේ විද්‍යාවේ අති විශාල කොටසකි. විද්‍යාත්මක පර්යේෂණවලට අනුව නිල් ග්‍රහලෝකය ලෙස හඳුන්වන මෙම ග්‍රහලෝකය මීට වසර බිලියන හතරකට පමණ පෙර නිර්මාණය වී ඇත. පෘථිවියේ මුල් අවධියේදී එහි ජීවත් වීමට සුදුසු ජීවියෙකු හමු නොවීය. ඉතා උණුසුම් පෘථිවිය සිසිල් වී අප ජීවත් වන පෘථිවිය නිර්මාණය වීමට බොහෝ වෙනස්කම් වලට භාජනය විය. විද්‍යාවේ මූලධර්මවලට අනුව පෘථිවිය වෙනස් වී එය අපට ත්‍යාගයක් ලෙස ලබා දී ඇත. මේ ස්වභාවය රැක ගැනීම අපේ ප්‍රධාන යුතුකමකි. මිනිසා ස්වකීය ආත්මාර්ථකාමීත්වය වෙනුවෙන් ස්වභාවධර්මය කොල්ලකෑවද ස්වභාවික විපත් සෑම විටම සිදු නොවේ. එය අපට මෙම වාසයට සුදුසු ගෝලය ලබා දී ඇති අතර, එය ඇති කරන දැඩි අන්තරායන් නොතකා, වර්තමාන දත්ත වලට අනුව, ජනගහනය තත්පරයට පුද්ගලයින් තිදෙනෙකුගේ අනුපාතයකින් වැඩි වී ඇත.

Earth before life began

ඉහළ යන මිනිස් ගහනය නිසා වනාන්තර, කෘෂිකාර්මික ඉඩම්, තණබිම් විනාශ වෙයි. කාර්මික, කෘෂිකාර්මික සහ රෝහල් අපද්‍රව්‍යවලින් ජලය අපිරිසිදු වේ. මේ ආකාරයේ දූෂණය නිසා ජලය, වාතය සහ ගොඩබිමට හානි සිදුවී ඇති අතර, අනාගත පරපුරට රෝග බෝවීමට අපද හේතු වේ. වනාන්තර අපට ස්වභාවධර්මය විසින් ලබා දී ඇති එක් දායාදයකි. හරිත හා රන්වන් ගස් ක්ෂේත්‍රයේ දක්නට ලැබේ. ආත්මාර්ථකාමී මිනිසා තම සුඛෝපභෝගීත්වය සඳහා සෞභාග්‍යයට අත්‍යවශ්‍ය වනාන්තර විනාශ කරයි, වන සතුන් සහ ශාක විනාශ කරයි, සහ හරිතාගාර ආචරණය වපුරයි, එය ලෝකයට වඩාත්ම භයානක ය. ගස් වැල් විනාශ කිරීමෙන් මනුෂ්‍ය වර්ගයා විනාශ වීම නිසැකය. අවාසනාවකට මෙන්, මිනිසා තම වර්ධනයේ දී ස්වභාවධර්මය පවත්වා ගැනීමට අසමත් වේ. එහි ප්‍රතිඵලයක් ලෙස ගෝලීය උණුසුම වැඩි ප්‍රධාන ගැටලුවක් බවට පත්ව ඇත. ස්වභාවධර්මය නිර්මාණය කිරීමේදී කෙතරම් බාධා පැමිණියද ස්වභාවධර්මය කිසිවිටෙකත් තමන්ව අලුත් කර ගැනීමට අසමත් නොවේ.

ස්වභාවධර්මය ආරක්ෂා කිරීම සෑම පුද්ගලයෙකුගේම යුතුකමයි. මිනිසුන් වන අපි මුදල් නමැති අජීවී වස්තුව කෙරෙහි ඇති ආස්වාදයෙන් අනාගත පරපුර අනාථ කිරීමට උත්සාහ කර ඇත්තෙමු. සොබා දහමේ අයිතිය නැති කර අප මුදල් සොයා තිබේ. මෙම තත්ත්වය මෙසේම පැවතුණහොත් සියවස් කිහිපයකින් සොබා දහම සමඟ බද්ධ වූ මිනිසාට සොබා දහම නැරඹීමට ගමනක් යාමට සිදුවනු ඇත. මේ අනතුර වළක්‌වා ගැනීමට සෑම කෙනෙක්‌ම ජලය අපතේ නොයවා, පොලිතින් ප්ලාස්ටික් භාවිතය අවම කර, හැකිතාක්‌ ගස්‌ සිටුවා, යහපත් ලෝකයක්‌ ගොඩනගා ගත යුතුය. සෑම දෙයකටම ක්ෂණික විසඳුමක් ලෙස සොබාදහම භාවිතා කළ යුතුය. පහසු යැයි සිතාගෙන සැනසීම අතිශෝක්තියට පත් නොකර ශිෂ්ඨාචාරය යැයි සිතනවා නම් තණ්හාව වපුරන්නේ නොමැතිව, ස්වභාවික සම්පත් විනාශ නොකර, ජීවතය පවතින තුරු අප ජීවත් වන සුරලොව රැක ගත යුතුය. අවම වශයෙන් අප දෑස් හැර මනස නිරවුල් කරගත යුතුය.

Let’s save our earth

 

මිනිස් ජීවිතය ආරම්භයේ සිටම ස්වභාවධර්මය මත රඳා පවතී. කලක් සොබා දහමට අනුගතව ජීවත් වූ මිනිසා අද එයින් බොහෝ දුරස් වෙමින් සිටී. අප සොබා දහම විනාශ කර එහි සංවර්ධනයට සුළු ප්‍රතිශතයකින් හෝ උපකාර කරනවා නම් සොබා දහමේ සුන්දරත්වය අපට දැකගත හැකියි. අසත්‍ය වූ, දුක් ගෙන දෙන කෘත්‍රිම දේ පසෙක තබා සත්‍ය වූත් ප්‍රසන්න වූත් සොබා දහම ආරක්‍ෂා කිරීම අපගේ මනුෂ්‍යත්වයේ ප්‍රධාන යුතුකමයි. මෙම ස්වාභාවික විපත් වැළැක්වීම සඳහා මානව සහයෝගීතාවය තීව්‍ර කළ යුතුය. ස්වාභාවික විපත්, ඒවායේ ප්‍රතිවිපාක සහ ඒවාට විසඳුම් වඩාත් පුළුල් ලෙස ප්‍රසිද්ධ කළ යුතුය. මේ සඳහා ලෝකයේ රටවල් එකමුතු වී එක අරමුණක් ඔස්සේ එක්ව වැඩ කළ යුතුයි. එසේ නොවුවහොත් සියල්ල විනාශ වී මිනිසාට හුදු වස්තුවක් ලෙස සිටීමට සිදුවනු ඇත. එසේනම් සත්‍යය අවබෝධ කරගෙන අපගේ අනාගත පරපුරට යහපත් ලෝකයක් නිර්මාණය කිරීමට අපට කාර්යභාරයක් ඇත. සොබාදහමට ආදරය කරන්නන් ලෙස අපි වේගයෙන් ඉදිරියට ගමන් කරමු. 

නුවණින් කටයුතු කරමු! වඩා යහපත් ජීවිතයක් නිර්මාණය කරමු!

Edited, translated and published by: RACSLIIT Editorial Team 2022-23

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s