Jesus performed many miracles in his time on earth. Yet one miracle became the firm foundation for the religion called Christianity. It is the resurrection of Jesus. Christians all around the world believe this miracle with the help of the Holy Bible. Many scientists, historians, and scholars also witness the resurrection of Christ. Without the resurrection of Jesus, the religion called Christianity would not exist. Albert Henry Ross known by his pseudonym name Frank Morrison was a writer who believed that “miracles do not happen”. With full of doubts about the miracles performed by Jesus, he started to write a book of skepticism called “Who Moved the Stone”. As he was doing studies and writing, his life changed. He could not stop getting attracted to Jesus. The book which he started to write to debunk Jesus, got a U-turn and the book ended as a huge witness to the resurrection of Jesus, and Frank was converted as a Christian.
Resurrection is one of the main reasons for the existence of Christianity. That is why St. Paul says, “if Christ has not been raised, our preaching is useless so is your faith. (1 Corinthians 15: 14 NIV)”. The resurrection of Jesus brings hope. If Christ has not risen, Christianity will either not exist or the Christians would be worshiping a dead God. Resurrection means we have a living God who abolished death. That means we have a God who has power over death and hell. That is why Christians strongly believe that even if they die today, they will be raised by Jesus on the day of resurrection.
The resurrection brings hope for the present and the future. Jesus suffered and died on the cross to deliver us from sin. So, we are forgiven of all our sins and we should refrain from sinning. And Jesus rose again on the third day. So, we do not need to fear death, for we have a God who conquered death. Hence, we have the hope for the present that we are forgiven of our sins, and for the future that we will be resurrected for eternity.
යේසුස් මිහිපිට සිටි කාලය තුළ බොහෝ ප්රාතිහාර්යයන් කළේය. එයින් එක් ප්රාතිහාර්යයක් ක්රිස්තියානි ධර්මය නමින් හැඳින්වෙන ආගමට ස්ථිර පදනමක් බවට පත්විය. එය යේසුස් වහන්සේගේ උත්ථානයයි. ලොව පුරා සිටින කිතුනුවන් මෙම ප්රාතිහාර්යය විශ්වාස කරන්නේ ශුද්ධ බයිබලයේ උපකාරයෙනි. බොහෝ විද්යාඥයින් , ඉතිහාසඥයින් සහ විද්වතුන් ද ක්රිස්තුස් වහන්සේගේ උත්ථානයට සාක්ශි සපයති. යේසුස් වහන්සේගේ උත්ථානය නොමැතිව ක්රිස්තියානි ධර්මය නම් ආගම නොපවතිනු ඇත.”ෆ්රෑන්ක් මොරිසන්” අන්වර්ථ නාමයෙන් හැඳින්වෙන ඇල්බට් හෙන්රි රොස්, “ප්රාතිහාර්යයන් සිදු නොවේ” යැයි විශ්වාස කළ ලේඛකයෙකි. යේසුස් කළ ප්රාතිහාර්යයන් පිළිබඳව සැකයෙන් පිරී සිටි ඔහු, “Who Moved the Stone” නමින් පොතක් ලිවීමට පටන් ගත්තේය. ඔහු අධ්යයන හා ලිවීම් කරමින් සිටියදී ඔහුගේ ජීවිතය වෙනස් විය. යේසුස්ට ආකර්ෂණය වීම නතර කිරීමට ඔහුට නොහැකි විය.යේසුස්ව පහත් කිරීම සඳහා ඔහු ලිවීමට පටන් ගත් පොත යූ-හැරීමක් ලබා ගත් අතර, යේසුස් වහන්සේගේ උත්ථානයට විශාල සාක්ෂියක් ලෙස පොත අවසන් වූ අතර ෆ්රෑන්ක් කිතුනුවකු බවට පරිවර්තනය විය.
ක්රිස්තියානි ධර්මයේ පැවැත්මට ප්රධාන හේතුවක් වන්නේ නැවත නැඟිටීමයි. ශාන්ත පාවුලු පවසන්නේ “ක්රිස්තුස් වහන්සේ උත්ථාන නොවූයේ නම්, අපගේ දේශනා කිරීම් මෙන්ම ඔබගේ ඇදහීම්ද නිශ්ඵල ය. (1 Corinthians 15: 14 NIV )”. යේසුස් වහන්සේගේ උත්ථානය බලාපොරොත්තුව ගෙන එයි. ක්රිස්තුස් වහන්සේ උත්ථාන නොවන්නේ නම්, ක්රිස්තියානි ධර්මය එක්කෝ නොපවතින අතර කිතුනුවන් මළ දෙවි කෙනෙකුට නමස්කාර කරනු ඇත.නැවත නැඟිටීම යන්නෙන් අදහස් කරන්නේ මරණය අහෝසි කළ ජීවමාන දෙවි කෙනෙක් අපට සිටින බවයි. ඒ කියන්නේ මරණයට හා නිරයට බලය ඇති දෙවි කෙනෙක් අපට සිටින බවයි. කිතුනුවන් දැඩි ලෙස විශ්වාස කරන්නේ ඔවුන් අද මිය ගියත්, ඔවුන්ව නැවත නැඟිටුවනු ලබන දවසේදී යේසුස් විසින් උත්ථාන කරනු ඇති බවයි.
නැවත නැඟිටීම වර්තමානය හා අනාගතය පිළිබඳ බලාපොරොත්තුවක් ගෙන එයි. අපව පාපයෙන් ගලවා ගැනීම සඳහා යේසුස් වහන්සේ කුරුසියේ දුක් විඳ මිය ගියේය. ඉතින්, අපගේ සියලු පාපවලට අපට සමාව ලැබී ඇති අතර අප පව් කිරීමෙන් වැළකී සිටිය යුතුය. තුන්වෙනි දවසේදී යේසුස් නැවත නැගී සිටියේය. එබැවින්, මරණයට බිය වීමට අපට අවශ්ය නැත, මන්ද අපට මරණය ජයගත් දෙවි කෙනෙක් සිටී. එමනිසා, අපගේ පව්වලට අපට සමාව ලැබෙනු ඇති බවටත්, අනාගතය සදාකාලයටම නැවත නැඟිටුවනු ඇති බවටත් බලාපොරොත්තුව ඇත.
இயேசு பூமியில் இருந்த காலத்திலே பல அற்புதங்களைச் செய்தார். ஆயினும் அவர் செய்த ஒரு அற்புதம் கிறிஸ்தவம் என்று அழைக்கப்படும் மார்க்கத்துக்கான உறுதியான அடித்தளமாக மாறியது. அதுவே இயேசுவின் உயிர்த்தெழுதல் ஆகும். உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த அற்புதத்தை பரிசுத்த வேதாகமத்தின் உதவியுடன் நம்புகிறார்கள். பல விஞ்ஞானிகள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் கூட கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாக உள்ளார்கள். இயேசுவின் உயிர்த்தெழுதல் என்று ஒன்று இல்லாமல், கிறிஸ்தவம் என்று ஒரு மார்க்கமே இருந்திருக்காது. ஃபிராங்க் மோரிசன் என்ற புனைப்பெயரால் அறியப்பட ஆல்பர்ட் ஹென்றி ரோஸ் என்ற எழுத்தாளர் “அற்புதங்கள் நடக்காது” என்ற கொள்கையைக் கொண்டிருந்தார். இயேசு நிகழ்த்திய அற்புதங்கள் குறித்து பல சந்தேகங்களுடன், “யார் கல்லை புரட்டியது” என்ற ஒரு அவநம்பிகையான புத்தகத்தை எழுதத் தொடங்கினார். அது தொடர்பாக படிப்புகளை நிகழ்த்தி அப் புத்தகத்தை எழுதிக்கொண்டு செல்லும் பொது அவருடைய வாழ்க்கை மாறியது. இயேசுவிடம் தான் ஈர்க்கப்படுவதை அவரால் நிறுத்த முடியவில்லை. இயேசுவின் உயிர்த்தெழுதலை பொய் என நிறுவும் நோக்கோடு அவர் எழுதத் தொடங்கிய புத்தகம் ஒரு திருப்புமுனையைப் பெற்று, அப்புத்தகம் உயிர்த்தெழுதலுக்கு ஒரு பெரிய சாட்சியாக மாறியதுடன், ஃபிராங்க் உம் கிறிஸ்தவராக மாற்றப்பட்டார்.
கிறிஸ்தவத்தின் இருப்புக்கு உயிர்த்தெழுதல் ஒரு முக்கிய காரணமாகும். அதனால்தான் புனித பவுல் “கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா” (1 கொரிந்தியர் 15: 14) என்று கூறினார். இயேசுவின் உயிர்த்தெழுதல் நமக்கு ஒரு நம்பிக்கையைத் தருகிறது. கிறிஸ்து உயிர்த்தெழுந்திருக்கவில்லை என்றால், கிறிஸ்தவம் என்ற மார்க்கம் இருக்காது அல்லது கிறிஸ்தவர்கள் ஒரு இறந்த கடவுளையே வணங்கிக்கொண்டிருப்பார்கள். உயிர்த்தெழுதல் மூலம் மரணத்தை பரிகரித்த உயிருள்ள கடவுள் எங்களுக்கு உள்ளார் என்பதை அறிகின்றோம். அதாவது மரணத்தின்மேலும் நரகத்தின்மேலும் அதிகாரம் கொண்ட ஒரு கடவுள் நம்மிடம் இருக்கிறார் என்று அறிகிறோம். அதனால்தான், இன்று மரித்தாலும், உயிர்த்தெழுதலின் நாளில் இயேசுவால் உயிரோடெழுப்பப்படுவார்கள் என்று கிறிஸ்தவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
உயிர்த்தெழுதலானது நமது நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஒரு நம்பிக்கையைத் தருகிறது. பாவத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்காக இயேசு சிலுவையில் பாடுபட்டு மரித்தார். எனவே நம்முடைய எல்லா பாவங்களும் மன்னிக்கப்படதுடன் நாமும் இனி பாவம் செய்வதிலிருந்து விலகியிருக்க வேண்டும். அத்தோடு இயேசு மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்தார். ஆகவே, மரணத்துக்கு நாம் அஞ்சத் தேவையில்லை, ஏனென்றால் மரணத்தை ஜெயித்த கடவுள் ஒருவர் நமக்கு இருக்கிறார். ஆகவே நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படது என்ற நிகழ்காலத்துக்குரிய நம்பிக்கையும், நாம் உயிரோடே எழுப்பப்படுவோம் என்ற எதிர்காலத்துக்கான நம்பிக்கையும் எமக்கு உண்டு.
Penned by: Rtr. T. Jeffrey Watson
Edited, translated and published by : RACSLIIT Editorial team 2020/21